Header

Sri Lanka Army

Defender of the Nation

04th June 2021 17:35:21 Hours

இரட்சிப்பு இராணுவம் பரிகளித்த புதிய சுவாச உபகரண தொகுதி இரத்தினபுரி ஆதார வைத்தியச்சாலைக்கு அனுப்பப்படும்

இலங்கையில் கொவிட்-19 சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொழும்பு 2 பிராந்திய இரட்சிப்பு இராணுவ தலைமையகம், நாட்பட்ட சுவாசக் கோளாறுகள் கொண்ட நோயாளிகளின் பயன்பாட்டிற்காக சுமார் 1.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள சுவாச உபகரண தொகுதியை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் நன்கொடையாக வழங்கியது. இலங்கை இரட்சிப்பு இராணுவத்தின் பிராந்திய தளபதி கர்ணல் நிஹால் ஹெட்டியாராச்சி மற்றும் அமைப்பின் அதிகாரிகள் ஜெனரல் சவேந்திர சில்வாவை வெள்ளிக்கிழமை (4) சந்தித்து இந்த மதிப்புமிக்க நன்கொடையை வழங்கினர். இது கொவிட் -19 நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இரத்னபுரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட உள்ளது.

இலங்கை கொவிட்-19 நோயாளிகளின் துன்பங்களை நிவர்த்தி செய்வதற்கான வெளிப்படையான நோக்கத்திற்காக, சுவிசேஷ நம்பிக்கையின் தொண்டு நிறுவனமான பிராந்திய இரட்சிப்பு இராணுவ தலைமையகம் அதன் சர்வதேச நிதியான இரட்சிப்பு இராணுவ உலக சேவை அலுவலகம் (SAWSO) மூலம் ரூ .1.3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிறிஸ்சாந்த பெர்னாண்டோ, இரட்சிப்பு இராணுவ ஒருங்கிணைப்பு செயலாளர் லெப்டினன்ட் கேணல் ரஞ்சித் சேனாரத்ன, மக்கள் தொடர்பு செயலாளர் லெப்டினன்ட் கேணல் அலிஸ்டர் பிலிப், மற்றும் பொலன்னருவை மாவட்ட திட்ட முகாமையாளர் திரு. தினுக ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.