02nd June 2021 22:08:24 Hours
19 வது மற்றும் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர் முழங்காவில் மற்றும் நாச்சிகுடா ஆகிய இரு நகரங்களில் தொற்று நீக்கும் திட்டத்தை மேற்கொண்டதுடன் கொவிட் -19 தொடர்பான விழிப்புணர்வு திட்டங்களை முழங்காவில் பொலிஸ் நிலையம், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சபையினருடன் இணைந்து 2021 மே மாதம் 24ம் திகதி பூநகரியில் முன்னெடுத்தனர்.
65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, மற்றும் 651 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் வசந்த பண்டார ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.