02nd June 2021 21:55:00 Hours
யாழ்ப்பாண தீபகற்பத்தின் சினோபார்ம் தடுப்பூசிகளை முறையாக ஒப்படைத்தல் ஞாயிற்றுக்கிழமை (30) யாழ்ப்பாண தாதியர் பயிற்சி பாடசாலையில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர், மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் சில பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தடுப்பூசி ஏற்றல் குறித்த இடத்தில் ஆரம்பித்த அதே வேளை தீபகற்பத்தின் வேறு 36 இடங்களிலும் தொடங்கப்பட்டது.. முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதல் மாத்திரை வழங்கப்படும்.
யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக படையினர் குறித்த தடுப்பூசி மையங்களை நடத்த உதவுவர்.