Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2021 16:26:45 Hours

சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து ஸ்ரீ சுமன சமன் விக்கிரகத்தை எடுத்துச் செல்லும் சடங்குக்கு படையினர் உதவி

மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேட்டின் 19 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் (எஸ்.எல்.என்.ஜி) படையினர் புனித யாத்திரை பருவத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் முந்தைய ஆண்டுகளில் நடைமுறைகளின் படி சுமன சமன் கடவுளின் விக்கிரகம் மற்றும் அதன் பிற வணக்கத்திற்குரிய சாதனங்கள் சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து 2021 மே மாதம் 27 ம் திகதி ஊர்வலமாக நல்லதன்னி விகாரை வரை கொண்டுவருவதற்கு உதவி செய்யப்பட்டது.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, 112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க மற்றும் 19 இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிக்காட்டலில் படையினர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி, நிகழ்வில் பங்கு கொண்டனர்.

மாவட்ட செயலாளர் திரு பி.கே.ஆர்.டி நந்தன கலவுட, அம்பகமுவ பிரதேச செயலாளர் திருமதி சிதர ருவனி கமகே, சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் விக்கிரகத்தை எடுத்துச் செல்லும் ஊர்வலத்தின் தொடக்கத்தில் பங்குபற்றினர். இந்நிகழ்வானது வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தலைமை தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.