Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2021 16:17:27 Hours

தனியார் நிறுவன அனுசரணையுடன் மேற்கு படையினரால் அவிசாவெல்லவில் கொரோனா விடுதி அமைப்பு

அவிசாவெல்ல தள வைத்தியசாலையில் பாழடைந்த நிலையில் காணப்பட்ட பழைய விடுதி ஒன்றினை 40 கட்டில்களை கொண்ட கொவிட்-19 நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் விடுதியாக மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் புனரமைக்கப்பட்ட விடுதி அதிகாரப்பூர்வமாக திங்கட்கிழமை (31) அதிகாரிகளிடம் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் நாடளவியிலான கொவிட் தொற்றாளர்களுக்கான கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கம் லியானகே அவர்களின் வழிக்காட்டலில் புதிய கொவிட் விடுதியை புனரமைக்கபட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேஜர் (ஓய்வு) ரோஷன் ஜயவர்தனாவின் ஒருங்கிணைப்பில் மிடாஸ் சேப்டி பிரைவேட் லிமிடெட் 2.5 மில்லியன் பெறுமதியான ஒரு தொகை மருத்துவ உபகரணங்கள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் கலந்தாலோசித்து, வழங்கி வைத்தனர்.

புதுப்பிக்கப்பட்ட விடுதி செவ்வாய்க்கிழமை (1) முதல் அவிசாவெல்ல தள வைத்தியசாலை ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது.

கோவிட் -19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் ரொஷான் ஜயமண்ணெ, மேஜர் (ஓய்வு) ரொஷன் ஜெயவர்தன, சுகாதார அதிகாரிகள் மற்றும் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.