02nd June 2021 16:10:34 Hours
கிழக்கை தளமாகக் கொண்ட படையினரின் வேண்டுகோளின் பேரில் ஒரு நன்கொடையாளரின் ஒத்துழைப்புடன் அம்பாறை மஹா ஓயாவில் மேலும் ஒர் ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டைக் கட்டுவதற்கான அடிக்கல் செவ்வாய்க்கிழமை (25) நாட்டப்பட்டது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவின் 241வது பிரிகேட்டின் 16 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஆர்.கொடித்துவக்கு அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் நன்கொடையாளரான கொழும்பு டி.எஸ்.எல் கார்கோ இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெடின் திரு நிசாந்த லக்சிரி இந்த வீட்டிற்கு நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார்.
பயனாளியான திரு. ஹெட்டியாராச்சிகே காமினி மற்றும் அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை நிலைமையை கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 24 வது படைப்பிரிவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர், நன்கொடையாளர் மூலப்பொருட்களின் நிதிச் செலவுகளுக்காக ரூ. 750,000.00 யை வழங்குவதற்கு ஒப்புக் கொண்டார்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் 24 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் 241 வது பிரிகேட்டின் மேற்பார்வையில் 16 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையினர் கட்டுமான பணிகளுக்கு தேவையான மனிதவளத்தையும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்குவர்.