02nd June 2021 16:19:12 Hours
கொவிட் 19 பரவலை கட்டப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாவற்குழி பகுதியில் நிர்மாணிக்கப்படும் புதிய இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் பாவனைக்காக 100 இரும்புக் கட்டில்களை இலங்கை பொறியியலாளர் ஆலோசனை பணியகம் (சி.இ.சி.பி.) செவ்வாய்க்கிழமை (01) பரிசளிப்பதன் மூலம் அதன் பெருந்தன்மையை காட்டியது.
அவசரகால திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பீரிஸின் வேண்டுகோளின்படி நன்கொடை நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு பொறியியலாளர் திரு. ஏ. புஷ்பராஜா மற்றும் சிரேஸ்ட செயல்பாட்டு பொறியியலாளர் திரு. ஏ சத்தியதாசன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் நலனுக்காக இந்த நல்லெண்ணம் மற்றும் ஊக்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதியும் யாழ் மாவட்ட கொவிட் தடுப்பிற்கான ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவிடம் இந்த புதிய கட்டில்களை முறையாக ஒப்படைப்பதற்கான உத்தியோக பூர்வ ஆவணங்களையும் நன்கொடையின் குறியீட்டாக கட்டிலினையும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளினால் கையளிக்கப்பட்டது.
அந்தச் சந்தர்பத்தில் 52 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர பீரிஸ், சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.