02nd June 2021 22:45:42 Hours
முல்லைத்தீவு பாதுகாப்ப படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவு அதன் சமூகம் சார்ந்த திட்டங்களில் ஒன்றை மீண்டும் ஒட்டுச்சுட்டான் பகுதியில் விவசாய சாத்தியங்களைக் கொண்ட பொதுமக்கள் மத்தியில் பெருந் தொகையான தென்னம் பிள்ளைகளை பகிர்ந்தளித்தது.
அந்த தென்னம் பிள்ளைகள் செவ்வாய்க்கிழமை (1) ஒட்டுச்சுட்டன் கூலான்முறிப்பு புனித ஜோசப் தேவாலயம் பாதிரியார்கள் மற்றும் சிவன் கோவில் குருமாரிடம் மேலதிக விநியோகத்திற்காக வழங்கப்பட்டன.
64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன, அந்த மத ஸ்தானங்களுக்கு விஜயம் செய்து அக்கறையுடையவர்களுக்கு விநியோகிப்பதற்காக ஒப்படைத்தார்.
இத்திட்டமானது 642வது பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன்ட் கேணல் யு.எல்.சி ஜயசேன அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அதே வேளை 64 வது படைப்பிரிவு படையினரால் ஏற்கனவே மே மாதம் 18 ம் திகதி தேசிய போர் வீரர்களின் தினத்தை முன்னிட்டு ஒரு தொகை கன்றுகளை விநியோகித்தனர்.
நிகழ்வில் குருமார்கள், 641 பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.பி.ஜே.சி ஜயவர்தன, 642 வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் வி.டி.எஸ். பெரேரா மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.