01st June 2021 19:37:01 Hours
வருடாந்த வெசாக் தினத்தை முன்னிட்டு 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க , அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து 'கிரி அஹாரா பூஜா' என்ற பால் உணவு படையல் 2021 மே மாதம் 20 ம் திகதி புனித ருவன்வெலிசேய மற்றும் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி வளாகத்தில் ஏற்பாடு செய்தார்.
மேலும் மற்றொரு தொண்டு அம்சமாக ஒரு தொகுதி மத புத்தகங்கள் படைப்பிரிவு தளபதி மற்றும் பிற அதிகாரிகளால் அங்கிருந்த பக்தர்களிடையே விநியோகிக்கப்பட்டன.
இதற்கிடையில் அதேவேளை 65 வது படைப்பிரிவின் 19 மற்றும் 17 (தொ) வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் கல்விலான், வெல்லங்குளம், நாச்சிகுடா, முழங்காவில் மற்றும் இரனமதநகர் பகுதிகளில் உள்ள ஏழை குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் கர்பிணி தாய்மார்களுக்கு வெசாக் தினத்தை முன்னிட்டு3000 ரூபா பெறுமதியான 60 உலர் உணவு பொதிகளை விநியோகித்தனர்.
திரு மோரிஸ் சவுண்டாஸ் ஜெயதிலக மற்றும் படையினர் மேற்படி திட்டத்திக்கு அனுசரனை வழங்கினர்.