01st June 2021 14:49:25 Hours
மதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் பாடநெறி பங்கேற்பாளர்கள் மற்றும் படையினர் வெசாக் பௌர்ணமி நாளில் (26) அப்பகுதியிலுள்ள 75 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகித்தனர். இதற்கான அனுசரனைகளை மொபிடெல் லங்கா பிரைவேட் லிமிடெட் மற்றும் சிலோன் பிஸ்கட் லிமிடெட் ( மஞ்சி) வழங்கியிருந்தமை குறுப்பிடத்தக்கது.
இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் அனில் சமரசிறியின் ஆலோசனையின் பேரில், ஒவ்வொன்றும் சுமார் ரூ. 4000 / = மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் அருணபுர, புபுதுகம, கந்தேகம, சிலுமினி சேய மற்றும் மதுரு ஓயாவைச் சுற்றியுள்ள தம்மின்ன கிராமங்களுக்குச் சென்று அந்த நிவாரணப் பொதிகளை ஏழை மக்களுக்கு வழங்கினர் .