Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2021 18:23:10 Hours

கனரக வாகனங்கள் மற்றும் மிதிவண்டிகள் மீண்டும் கிளிநொச்சி பாதைகளுக்கு

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பியால் நானாயக்காரவசம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு தொகுதி பழைய வாகனங்கள் மற்றும் மிதிவண்டிகள் முழுவதுமாக பழுதுபார்க்கப்பட்டு அவற்றை கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு அலகுகளின் பயன்பாட்டிற்காக 2021 மே மாதம் 27ம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டு லொரிகள், மூன்று டிராக்டர்கள், ஆம்புலன்ஸ், எண்பது மிதிவண்டிகள் மற்றும் இருபது உணவு கொள்கலன் சைக்கிள்கள் 7 வது இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியாளர் படையின் கட்டளை அதிகாரி மேஜர் DMCM வீரகோன்அவர்களின் மேற்பார்வையில் அதன் படையினரால் பழுதுபார்க்கப்பட்டன .

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், சிரேஸ்ட பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முறையான ஒப்படைப்பின் போது கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.