Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2021 22:29:11 Hours

கிளிநொச்சியில் சேதன பசளை புதிய பச்சை வீட்டு விவசாயத்திற்கு படையினர் ஊக்குவிப்பு

அரசாங்கத்தின் சேதன பசளை விவசாய கொள்கைக்கு ஊக்கமளிக்கும் வகையில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி அளித்த வழிகாட்டுதலின் பேரில் 66 வது படைப்பிரிவின் இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படை வழங்கிய தொழில்நுட்ப நிபுணத்துவத்தில் 1000 சதுர அடியிலான பெரும் பச்சை வீடு அடைக்கப்பட்டது.

இது 2021 மே மாதம் 29 ம் திகதி 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்படுவதற்கு முன்னர் கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க சிவில் விவகாரங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்கையில் 24வது விஜயபாகு காலாட்படை மற்றும் 5 (வி) வது இயந்திரமயல் காலாட்படை ஆகியவற்றின் படையினரால் முன்னெடுக்கப்படும் புதிய பச்சை வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டார்.

இந்த புதிய பச்சை வீட்டில் தாவரங்களை வளர்ப்பது என்பது நாட்டின் தற்போதைய விவசாய போக்குகள் மற்றும் திட்டங்களில் இராணுவத்தின் பங்களிப்பின் அதிக பிரதிபலிப்பாகும். இந்த திட்டத்தின் மூலம், இராணுவ முகாம் வளாகங்களின் விவசாய பயிர்களை வளர்பதற்கு உயிரியல் இரசாயன கிருமிநாசிகள் மற்றும் சேதன பசளை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுகின்ற அதே நேரத்தில் பச்சை வீடு தொடர்பில் படையினர் அறிவீட்டப்படுவர்.

இரண்டாவது கட்டமாக, 66 வது படைப்பிரிவின் கட்டுப்பாட்டு பிரிவிற்குட்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஆர்கோ-தாவரங்களை விநியோகிக்கும்.

66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்கவின் வழிகாட்டுதல்கள் வறண்ட காலநிலைக் கொண்ட இப்பிரதேசத்தில் பச்சை வீட்டுக் கருத்தை யதார்த்தமாக மாற்ற உதவியது.