Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2021 19:54:48 Hours

613 வது பிரிகேட் படையினரால் கைவிடப்பட்ட வைத்தியசாலை கட்டடம் இடைநிலை பராமரிப்பு நிலையமாக

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 பிரிகேட் படையினர் மொரவக்க வைத்தியசாலை வளாகத்தில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தை புதுப்பித்து 54 கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையிலான இடைநிலை நிலையமாக மாற்றப்பட்டது.

பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கம் லியானகே மற்றும் 61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே ஆகியோரின் மேற்பார்வையில் புதுப்பித்தல் பணிகள் தொடங்கப்பட்டன.

613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு, 3 கெமுனு ஹேவா படையினருடன் இணைந்து ஒரு சில நாட்களில் இந்த திட்டத்தை மேற்கொண்டார். இது சனிக்கிழமை (29) உத்தியோகபூர்வமாக வைத்தியசாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.