Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2021 18:41:39 Hours

551 வது பிரிகேட் படையினர் 48.9 கிலோ கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட்டின் 4 வது இலங்கை சிங்க படையினர் மறைத்து வைத்திருந்த 48.9 கிலோ கேரள கஞ்சா (கஞ்சா), ஒரு மீன்பிடி படகு மற்றும் இரண்டு ஸ்கூட்டர்களை நேற்று இரவு (30) இரவு 11 மணியளவில் கடற்கரை ரோந்து நடவடிக்கையின் போது பருத்தித்துறையில் கடற்படையினருடன் இணைந்து கைது செய்தர்.

அவை மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஒன்றாக யாழ்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, 55 வது படைப்பிரிவு தளபதி, 551 பிரிகேட் தளபதி மற்றும் 4 வது சிங்கப் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் குறித்த ரோந்து மேற்கொள்ளப்பட்டது.