Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2021 22:10:03 Hours

இரசாயனத்தால் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கடற்கரையை சுத்தம் செய்ய இராணுவ இரசாயணவியல் படை முன்னணியில்

இரசாயனத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு கடற்கரையினை துப்புரவாக்கும் பணிகளில் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை இராணுவத்தின் 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்கவியல் மற்றும் அணுசக்தி படையின் பொறியியலாளர்கள் வியாழக்கிழமை (27) கடற்கரையை சுத்தம் செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் அவசியமான தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கினர்.

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே உள்ள கடற்பரப்பில் 'எக்ஸ்-பிரஸ் பேர்ல்' என்ற கொள்கலன் கப்பலில் இருந்து கசிந்த இரசாயனத்தால் மாசடைந்த கடற்கரையினை சுத்தம் செய்வதற்காக 14 வது இரசாயன உயிரியல் கதிரியக்கவியல் மற்றும் அணுசக்தி படையின் இரண்டு அதிகாரிகள் மற்றும் 15 சிப்பாய்கள் இலங்கை துறைமுக அதிகாரசபை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

ஏறக்குறைய 4.8 கி.மீ தூரத்தை அனைத்து சகோதரி சேவைகளின் படைவீரர்களுடனான துப்புரவு நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன.