Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2021 10:35:31 Hours

தற்போது பெண் சிப்பாய்களின் சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்து குழு யாழ் கொவிட்-19 இன் பரவல் கண்காணிப்பில்

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையின் படைத் தளபதி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 7 இலங்கை இராணுவ மகளிர் படையினரின் பெண் வீரர்களைக் கொண்ட விரைவு எதிர்வினை சிறப்பு மோட்டார் ரோந்துக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த குழு செவ்வாய்க்கிழமை (25) முதல் 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் கட்டளை அதிகாரி மேஜர் ரஷ்மி கால்ஹேனவின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு மகளிர் படையின் விரைவு எதிர்வினை சிறப்பு மோட்டார் ரோந்து குழு அவசரகால சூழ்நிலையில் செயல்படும் மற்றும் கொவிட் -19 தடுப்பு பணிகள் மற்றும் கட்டுப்பாட்டு செயல்முறைக்கு உதவும். செவ்வாய்க்கிழமை (25) மக்கள் செறிவு மிக்க யாழ்ப்பாணம் நகரத்தையும் அதன் புறநகர்ப் பகுதியையும் உள்ளடக்கிய முதல் நடவடிக்கையை ஆரம்பித்தது.