Header

Sri Lanka Army

Defender of the Nation

27th May 2021 08:35:31 Hours

மட்டு. வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் வைத்திய உபகரணங்கள் வழங்கிவைப்பு

கொவிட் – 19 தடுப்புக்கான மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (21) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு.கே.கருணாஹரன், மேலதிக மாவட்டச் செயலாளர், மட்டக்களப்பு மாநகர மேயர், 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, 231 பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி ஆகியோரின் பங்குபற்றலில் நடைப்பெற்றது.

மேலும், மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த அவர்களின் ஏற்பாட்டில் மேற்படி கூட்டத்தின் போது, அறுவை சிகிச்சைக்கான வைத்திய உபகரணங்களை தூய்மைப்படுத்துவதற்கான இயந்திரமொன்றினையும், தொற்று நீக்கம் செய்வதற்கான இயந்திரம் ஒன்றினையும் மட்டக்களப்பு பிரெண்டிக்ஸ் எசென்சியல்ஸ் நிறுவனத்தின் மனிதவள முகாவைத்துவ சிரேஸ்ட முகாமையாளர் திரு. ஸஹா ஹமீட் மற்றும் ஈஸ்டர் லெகூன் ஹோட்டல் தலைவர் திரு.செல்வராஜ் ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.