Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2021 08:09:33 Hours

கிளிநொச்சி படையினர் தொடர்ந்தும் கொவிட்-19 விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு திட்டங்களில்

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் தளபதி நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கிளிநொச்சி படையினர் கொவிட் -19 பரவலை தடுக்கும் பலவிதமான மனிதாபிமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகம் சிறப்பு மோட்டார் சைக்கிள் ரோந்து குழுக்களைப் பயன்படுத்துவதன் மூலம் படையினர் தொடர்ந்தும் வீதித் தடைகள், வாகனம் மற்றும் பயணிகள் நடமாட்டங்களைச் அவதானித்தல், அத்தியாவசிய சேவைகளை மேம்படுத்துதல், சிறப்பு விழிப்புணர்வு திட்டங்களை நடத்துதல், பொது இடங்களை கிருமி நீக்கம் செய்யும் நடை ரோந்துகள் போன்றவற்றை வைரஸை கட்டுப்படுத்தும் பொருட்டு மேற்காண்டு வருகின்றனர்.

இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் படி கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் மேற்பார்வையில் ஏற்கனவே பாரதிபுரம் 350 கட்டில்கள், முருகண்டி 200 கட்டில்கள் மற்றும் பரந்தன் 200 கட்டில்கள் கொண்ட கொவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 03 இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்றுநோயை ஒழிக்க கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி அதிகபட்ச படையினரை பயன்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி அறிவுறுத்தியதுடன், பொலிஸார் மற்றும்சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பொதுமக்கள் மீதான கண்காணிப்பு செயல்முறையைத் தொடரவும் உத்தரவிட்டார்.

இந்த முயற்சிகள் வெற்றிபெற அனைத்து படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள் மற்றும் ஏனைய அமைப்புக்களின் கட்டளை அதிகாரிகள் இச்செயற்பாட்டின் வெற்றிக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர்.