Header

Sri Lanka Army

Defender of the Nation

26th May 2021 15:24:08 Hours

"பயணக் தடைகளை ஓய்விற்காக பயன்படுத்தி கொவிட் – 19 க்கு எதிரான போராட்டத்தில் சுகாதார துறையினருக்கு உதவுங்கள்

இன்று (24) பிற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் மாநாட்டின் போது தற்போது நடைமுறையில் பொதுமக்களின் நடமாட்டத்தை 2021 ஜூன் 7 ஆம் தேதி வரை நீடிக்க தீர்மானித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. (மே 25), திங்கள் (31) (மே 25) செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (ஜூன் 4) ஆகிய தினங்களில் பயணத்தடை தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

"ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள (25, 31 மே & ஜூன் 4) மூன்று நாட்களிலும் பொதுமக்கள் தங்களின் விருப்பத்துக்கமைய உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள், மீன் / இறைச்சி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை பிரத்தியேகமாக கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும், . வீட்டிலிருந்து ஒரு மாத்திரமே அவற்றை கொள்வனவு செய்ய செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதனால் சுகாதார ஊழியர்களுக்கு தொற்றுநோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவ முடியும் என்றும் . இன்று (24) காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டதென பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்தார்.

அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 4.00 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு, அதே தினத்தில் இரவு 11.00 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். பல சரக்கு பொருட்கள், மருந்தகங்கள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் மற்றும் பேக்கரிகள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து மது கடைகளும் முழுமையாக மூடப்பட்டிருக்கும். இதன்போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார். செவ்வாய்க்கிழமை (25) இரவு 11.00 மணி முதல், அனைத்து கட்டுப்பாடுகளும் முன்பை போலவே நடைமுறைக்கு வரவுள்ளதோடு மே 31 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை தொடரும். அதனைடுத்து இரவு 11.00 மணி முதல், அன்றைய தினம் (31) மாலை முதல், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன் 2021 ஜூன் 4 அதிகாலை 4.00 மணிக்கு வரை மட்டுமே பயணத்தடை தளர்த்தப்படும். ஜூன் 4 அன்று மாலை கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு வருவதுடன் 2021 ஜூன் 7 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை தொடரும் என ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு தினங்களில் வழங்கியதை போன்று இந்த ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ஆளும் தரப்பின் பிரதம கொரடாவுமான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.