24th May 2021 14:10:01 Hours
613 பிரிகேட் படையினர் மற்றும் 14 (தொ) கெமுனு ஹேவா படையினர் எல்பிட்டிய பகுதியின் ஒரு தொழிற்சாலை கட்டிடத்தை வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் இடைநிலை பராமரிப்பு நிலையமாக மேம்படுத்தும். திட்டத்தைத் தொடங்கினர்.
தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிய இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் 400 க்கும் மேற்பட்ட கொவிட் -19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கம் லியனகே வழங்கிய வழிகாட்டுதலின் படி சுகாதார மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் அதன் மேம்பாடு மேற்கொள்ளப்பட்டது.
61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தம்மி ஹேவகே மற்றும் 613 பிரிகேட் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு ஆகியோரின் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன், கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த செயல்முறை தொடங்கப்பட்டது.