Header

Sri Lanka Army

Defender of the Nation

24th May 2021 10:08:47 Hours

நகுலுகம மற்றும் புத்தல மாவட்ட வைத்தியசாலைகளில் கொவிட் - 19 சிகிச்சைக்கான புதிய வார்டுகள் மேம்படுத்தப்பட்டது

112 பிரிகேட் படையினர், 23 வது கஜபா படையினர், 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படை மற்றும் 10 (தொ) பொறியியல் சேவை படையினரால் நகுலுகம மாவட்ட வைத்தியசாலையை கொவிட் – 19 நோய்க்கு சிகிச்சை அளிக்ககூடிய இடைநிலை சிகிச்சை மையமாக மாற்றியமைத்திருந்த நிலையில் அதன் பணிகள் செவ்வாய்க்கிழமமை (18) ஆரம்பிக்கப்பட்டன.

அதேநேரம் 121 பிரிகேட் மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையினர் ஒன்றினைந்து புத்தல பிரதேச வைத்தியசாலையிலுள்ள பகுதியொன்றை இடைநிலை பாராமரிப்பு நிலைமையமாக மாற்றியமைத்திருந்த நிலையில் அதன் செயற்பாடுகளும் திங்கட்கிழமை (17) ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த பணிகளில் சுகாதார அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் வைத்தியசாலை ஊழியர்கள், ஆகியோரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டதுடன், பிரதேசத்தில் திடீரென நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதற்காக முன்னெடுக்கப்பட்ட மேற்படி பணிகளை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக மேஜர் ஜெனரல் தளபதி ரஞ்சன் லமாஹேவா கண்காணித்தார்.

மேற்படி இடைநிலை பராமரிப்பு மையங்களை அமைக்கும் பணிகள் பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, 112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக பல்லேகும்புர, 121 பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய செனவிரத்ன ஆகியோரின் வழிகாட்டலுக்கமைய முன்னெடுக்கப்பட்டன.