Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd May 2021 18:59:53 Hours

மன்னார் மற்றும் வன்னி படைகளால் நிறுவப்பட்ட இடைநிலை சிகிச்சை மையங்கள் புதிய தொற்றாளர்களின் சிகிச்சைக்கு தயார்

பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய வஹமல்கொல்லேவ, மன்னார் மற்றும் வவுனியா பகுதிகளில் தொற்றாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு முகம்கொடுப்பதற்கு அவசியமாக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்ட செயலாளரின் ஒருங்கிணைப்பில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்பட்ட டேர்க்கி சிட்டி கல்லூரியை 120 பேர் தங்கக்கூடிய இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டாரவின் வழிகாட்டலுக்கமைய 54 வது படைப்பிரிவு தளபதியினால் தனது படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

543 வது பிரிகேட் தளபதி அஷல ஆராச்சியின் மேற்பார்வையின் கீழ் 7 வது விஜயபாகு காலாட்படை படையினர் ஆறு நாட்களுக்குள் மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக மன்னார் வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதேநேரம், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 56 வது படைப்பிரிவு தளபதி ஆகியோரின் ஆலோசணைகளுக்கு அமைவாக 562 பிரிகேட் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்சவின் மேற்பார்வையில் 2வது கள பொறியியல் படையினரால் 200 பேர் தங்கக்கூடிய இடைநிலை பராமரிப்பு நிலையமையாக வவுனியா பொருளாதார மையம் மாற்றியமைக்கப்பட்டது.

மேற்படி மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையங்கள் 2021 மே 12 அன்று வவுனியா வைத்தியசாலையின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

அதற்கிடையில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21வது படைப்பிரிவின் வஹமல்கொல்லேவ 2 ஆவது இலங்கை இராணுவ போர்கருவிகள் தொழிற்சாலை வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதியின் ஒருங்கிணைப்பில் 250 பேர் தங்கக்கூடிய இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியக்கப்பட்டுள்ளது.

211 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமன் சேனாரத்னவின் மேற்பார்வையில் 2 வது பொறியியல் சேவைப் படையினரால் ஆறு நாட்களில் மேற்படி பணிகள் நிறைவு செய்யப்பட்டதுடன், 2021 மே 14 அன்று அனுராதபுரம் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.