Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd May 2021 20:30:46 Hours

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு அவசியமான 20,000 கட்டில்கள் படையினரால் தயாரிப்பு

இலங்கை இராணுவத்தினர் தங்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்தை ஒழித்த தேசத்தின் பாதுகாவலர்கள் என்பதில் விவாதத்திற்கு இடமில்லை. அதன்படி தற்போது இராணுவத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுவரும் 20000 கட்டில’களை உற்பத்தி செய்யும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அத்தோடு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும், 112 மேற்பட்ட இராணுவத்தின் இடைநிலை பராமரிப்பு மையங்களை நிர்மாணிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

வைரஸ் தாக்குதலின் 3 வது அலையின் ஆரம்ப அச்சுறுத்தல் புத்தாண்டுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து வரும் நிலையில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 2021.04.21 ஆம் திகதியிலிருந்து சில தினங்களுக்குள் 10,000 கட்டில்களை வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தமைக்கமைய தற்போது 10,000 கட்டில்கள் தயார் நிலையில் உள்ளன.

அதன்படி சனிக்கிழமை 22 வரையில் நாடு முழுவதுமுள்ள இடைநிலை பராமரிப்பு நிலையங்களுக்கு அவசியமான 19,501 இரும்பு கட்டில்களை இராணுவம் வழங்கியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை கடந்த ஆண்டு கொஸ்கமவிலுள்ள இராணுவ தொழில்துறை வளாகத்தில் தொற்று நோய் பரவ ஆரம்பித்தமைக்கு பிற்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். இலங்கை இராணுவ தலைமையகத்தின் போர்க் கருவிகள் பணிப்பாளர் நாயகம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ ஆயுத கல்லூரியின் படையினரால் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இராணுவ தளபதியின் அறிவுரைக்கமைய சனிக்கிழமை (22) மேற்படி படையினரால் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளின் பிரத்தியேக பயன்பாட்டிற்கு அவசியமான 60,002 படுக்கை விரிப்புகளை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் அதன்படி இராணுவத்தினால் மேம்படுத்தப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிசிசை பெரும் கொவிட் - 19 நோயாளிகளுக்காக 22,198 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நாடு முழுவதிலுள்ள அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி பணிகள், நாட்டிலுள்ள தனியார் துறைக்கு சொந்தமான கட்டிடங்களை இடைநிலை பராமரிப்பு மையங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேற்படி பணிகள் அந்தந்த பகுதிகளிலுள்ள சுகாதார சேவை பணிப்பாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும் கொவிட் – 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இராணுவத்தினரால் நிறுவப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையங்கள் மற்றும் வைத்தியசாலைகள் தொடர்பான விபரம் வருமாறு :

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம்

பெரியபச்சிளைப்பள்ளி, வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி, கோப்பாய் தேசிய கல்லூரி மற்றும் நாவட்குழி கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம்

திருமுருக்கண்டி, பாரதிபுரம் முன்னாள் இராணுவ மருத்துவமனை - மற்றும் பரந்தன் இடைநிலை சிகிச்சை மையம் கிழக்கு பாதுபாப்பு படைத் தலைமையகம்

மட்டக்களப்பு கெம்பஸ் - பூனானி, புலதிசிபுர ஆசிரியர் பயிற்சி கல்லூரி – கல்லேல்ல, நிலாவெலி சமூர்த்தி நிலையம், பிரெண்டிக்ஸ் – பூனானி, ஹார்டி தொழில்நுட்ப கல்லூரி - அம்பாறை, கந்தகாடு மற்றும் கந்தளாய் இளைஞர் மன்றங்கள், ஹிங்குருகொட , அம்பாறை தாதியர் பயிற்சி பாடசாலைகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம்

68 வது படைப்பிரிவு பட்டாலியன் பயிற்சி பாடசாலை மற்றும் புதுகுடியிருப்பு வீணாவில் பாதுகாப்பு படைத் தலைமையகம் வன்னி

டேர்க்கி சிட்டி கல்லூரி மன்னார் ,வஹமல்கொல்லேவ இராணுவ போர்கருவிகள் தொழிற்சாலை, வவுனியா பொருளாதார மத்திய நிலையம், கல்கிரியாகம , மிஹிந்தலை சிவில் பாதுகாப்பு பயிற்சி பாடசாலைகள் பாதுகாப்பு படைத் தலைமையகம் மேற்கு.

யக்கல இளைஞர் மன்றம், வத்துபிட்டிவல இளைஞர் மன்றம், பிங்கிரிய ஆசிரியர் கல்லூரி, ஸ்ரீபாத ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தம்பதெனிய பயிற்சி கல்லூரி, ராஜகிரிய ஆயுர்வேத , பிரெண்டிக்ஸ் – ரம்புக்கன, மஹாவெலி இளைஞர் மன்றம் – எம்பிலிபிட்டிய, ருவன்புர ஆசிரியர் கல்லூரி – கஹாவத்த, ஆசிரியர் கல்லூரி – தர்கா நகர், பஸ்துன்ரட்ட ஆசிரியர் கல்லூரி - ஹொரன, கொழும்பு பல்கலைக்கழம், ஹொரன ஸ்ரீபாலி கலைப்பீடம், அக்மீமன – ருஹூன ஆசிரியர் கல்லூரி, கரந்தெனிய வைத்தியசாலை, பொல்வத்தை வைத்தியசாலை,ஹபராதுவ வைத்தியசாலை , பெந்தொட்ட வைத்தியசாலை, வெலிகம வைத்தியசாலை, தெய்யன்தர வைத்தியசாலை, பேருவலை பெலிஹுல்லோய மின்சார சபை பயிற்சி கல்லூரி, மீகொட ஆயுர்வேத வைத்தியசாலை, உயர்திறன் பாடசாலை மதுரங்கேனி, பதுரலிய ஆயுர்வேத வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, கொழும்பு பல்கலைக்கழக ஆயுர்வேத வளாகம், மீகொடை மனித வள முகாமைத்துவ மையம், சீதுவை மற்றும் மத்துகம வைத்தியசாலை, நாவின்ன ஆயுர்வேத வைத்தியசாலை, கொழும்பு கலாசார மையம், வாரியபொல, வயம்ப தொழில்நுட்ப கல்லூரி, மீதொட்டுமுல்லை அரச நெற் களஞ்சியசாலை, தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி - ரத்மலானை, இரத்தினபுரி ஆயுர்வேத வைத்தியசாலை, ஜம்புரலிய ஆயுர்வேத வைத்தியசாலை- பிலியந்தலை, ஆயுர்வேத வைத்தியசாலை - கேகாலை, மலியதேவ ரஜமாஹா விகாரை – ஏலியகொட வைத்தியசாலை, பலாங்கொடை வைத்தியசாலை, படபொல மாவட்ட வைத்தியசாலை, பத்தேகம வைத்தியசாலை, ஹக்மன கங்கொடகம மாவட்ட வைத்தியசாலை, திக்வெல்ல வைத்தியசாலை, அக்குரெஸ்ஸ வைத்தியசாலை, ஹொரன இராணுவ விடுதி வளாகம், சிறுவர் பாதுகாப்பு பயிற்சி கல்லூரி - பாணந்துறை மற்றும் இதல்கந்த ஆடைத் தொழிற்சாலை

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகம்

DEPO கட்டிடம் – கஹாகொல்ல, மஹாவெலி பயிற்சி பாடசாலை - பொல்கொல்லை, அங்குணகொலபெலஸ்ஸ விவசாய பயிற்சி கல்லூரி, பிந்துனுவெவ பயிற்சி கல்லூரி, பேராதனை பயிற்சி கல்லூரி, பெனிதெனிய பயிற்சி கல்லூரி, கம்பளை இளைஞர் மன்றம், கம்பளை மீபிளிமான இளைஞர் மன்றம், அரச வைத்தியசாலை - ஹம்பாந்தோட்டை, அம்பலந்தோட்டை வைத்தியசாலை, மெதகம வைத்தியசாலை, வலஸ்முள்ள வைத்தியசாலை, வெல்லவாய இளைஞர் மன்றம், கிரிந்த வைத்தியசாலை, தங்காலை வைத்தியசாலை, புத்தல வைத்தியசாலை, NIPM பகவந்தலாவை, மாவட்ட வைத்தியசாலை மித்தெனிய, நுவெரெலியா நகர சபை மண்டபம், மாவட்ட வைத்தியசாலை கிரம, ஹம்பந்தோட்டை வீரவில இளைுர் மன்றம், சியம்லாண்டுவ இளைஞர் மன்றம், லுனுகம்வெஹெர இளைஞர் மன்றம், மொனராகலை இளைஞர் மன்றம், மாபகடவெவ இளைஞர் மன்றம் – மஹியங்கனை, இ.பொ.ச. மெரிகோல்ட் கட்டிதத்தொகுதி பதுளை மற்றும் விவசாய வளாகம் – வெலிகட

53 வது படைப்பிரிவு தலைமையகம்.

நாலந்த வைத்தியசாலை, கலேவல வைத்தியசாலை, லக்கல வைத்தியசாலை, மாத்தளை தொழில்நுட்ப கல்லூரி, அம்பன வைத்தியசாலை, தம்புள்ளை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் இனாமலுவ இளைஞர் மன்றம்