Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2021 19:22:40 Hours

பலாலியில் இராணுவ அடிப்படை வைத்தியசாலை திறந்து வைப்பு

போர் வெற்றி நாள் மற்றும் போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பலாலி இராணுவ தள வைத்திய மேலும் விரிவாக்கம் செய்து வார்டுகளுடன் புதிய இரண்டு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த இரண்டு மாடி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களால் திங்கள்கிழமை (17) அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிகல் நாட்டும் நிகழ்விற்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவரை பலாலியில் உள்ள இராணுவ தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி மேஜர் லஹிரு ரத்னவீர அவர்கள் வரவேற்றார்.

அதற்கமைய ' பிரித்' பராயணங்களுக்கிடையில், சுபநேரத்தில் பிரதம அதிதி அவர்களால் புதிய இரண்டு மாடி கட்டிட வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிகல் நாட்டப்பட்டது. அத்துடன் வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி பிரிகேடியர் வண்தித மகின்கந்த மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.

இப் புதிய இரண்டு மாடி கட்டிடமானது 180 X 50 பரப்பில் சில மாதங்களுக்குள் இராணுவ நிதிகள் மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 5 ஆவது பொறியியற் சேவை படையணி மற்றும் படையினரால் பொறியியற் சேவை படையணி மேற்பார்வையில் இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் படையினரின் ஆதரவுடன் கட்டி முடிக்கப்பட்டவுள்ளது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவரது வருகையை குறிக்கும் வகையில் இராணுவ அடிப்படை வைத்தியசாலை வளாகத்தில் ஒரு 'சந்தனம்' மரக்கன்றயும் நட்டுவைத்தார். அத்துடன் அனைவருடனும் குழு புகைப்படம் எடுத்து கொண்டார். இறுதியாக, யாழ் தளபதி தனது எண்ணங்களை விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பதிவிட்டார்.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணிப்பாளர், பதவி நிலை அதிகாரிகள், அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் இராணுவ தள வைத்தியசாலையில் உள்ள படையினர் பங்கேற்றனர், சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி இந் நிகழ்வு இடம் பெற்றது.