Header

Sri Lanka Army

Defender of the Nation

21st May 2021 08:55:41 Hours

மேலும் சில பொலிஸ் மற்றும் கிராமசேகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

இன்று காலை (21) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,443 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 2 பேர் வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள் என்பதுடன் ஏனைய 3,441 பேரும் உள்நாட்டில் அறியப்பட்டவர்கள் அவர்களில் அதிகமாக 822 பேர் கம்பஹா மாவட்டத்திலும், 674 பேர் கொழும்பு மாவட்டத்திலும் 287 பேர் களுத்துறை மாவட்டத்திலும், 1,658 பேர் ஏனைய மாவட்டங்களிலும் அறியப்பட்டுள்ளனர் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

இன்று காலை (21) வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 154,785 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் 57,803 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்கள் என்பதோடு அவர்களில் 123,531 முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 30,165 வைத்தியசாலைகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு வௌ்ளிக்கிழமை (21) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 1,165 பேர் குணமடைந்து பராமரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் 38 மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி (21) காலை வரையில் நாட்டில் பதிவான கொவிட் – 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,089 ஆக பதிவாகியுள்ளது.

அதற்கமைய வௌ்ளிக்கிழமை (21) காலை பளை வடக்கு, பளை பொலிஸ் பிரிவு, கல்குடா பொலிஸ் பிரிவின் கல்மடு, கிரிவெவ, செவனகல, பஹிரவ, ஹபரதாவெல, ஹபரங்கள, மஹரகம மற்றும் செவகலவிலுள்ள இடிகொலபெலெஸ்ஸ பொலிஸ்பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி 3 பொலிஸ் பிரிவுகளும், 28 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு இன்று காலை (21) இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் பன்னல பொலிஸ் பிரிவு உள்ளடங்களாக 199 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.