Header

Sri Lanka Army

Defender of the Nation

21st May 2021 08:10:41 Hours

மூன்று இடைநிலை சிகிச்சை மையங்களுடன் எந்தவொரு சூழ்நிலைக்கும் முகம்கொடுக்க தயார் நிலையில் கிளிநொச்சி படையினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட் - 19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுப்பதற்காக 3 இடைநிலை பராமரிப்பு நிலையங்களை நிறுவும் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுரைக்கமைவாக கிளிநொச்சி மாவட்ட கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் பாரதிரிபுரத்தில் 200 கட்டில்கள் வழங்கும் பணிகளும், பந்தனிலுள்ள இராணுவ இலேசாயுத காலாட் படையின் ஏ முகாமினை 200 கட்டில்கள் வசதியை கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றியமைக்கு செயற்பாடுகளும் படையினரால் முன்னெடுக்கப்பட்டன. இவ்விடங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தை திங்கட்கிழமை (17) கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் தளபதி மேற்கொண்டார்.

அதேபோல் கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் முறிகண்டி பகுதியில் காணப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தை 350 கட்டில்களுடன் கூடியதான இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைத்தனர்.

மேற்படி பகுதிக்கான தளபதியின் விஜயத்தின் போது வைத்திய ஊழியர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், அவர்களுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அத்தோடு தீர்க்கமான காலகட்டத்தில் சமூக பணிகளில் ஈடுபட்டிருப்போரின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டதுடன் பிரிகேட் தளபதிகள் மற்றும் பிற அமைப்புக்களின் கட்டளை அதிகாரிகளும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.

மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.என்.சரணவனபவன், தர்மபுறம் வைத்தியசாலையின் வைத்தியர் தரங்க, தாதியர்களின் பிரதானி திரு. குப்பேந்திரராஜா முரளிதரன், 57வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, தனிமைப்படுத்தல் நிர்வாகச் செயற்பாடுகளின் பிரதானி பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்க, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொதுப்பணி கேணல் மற்றும் கிருஷ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையின் வைத்தியர் செல்வம் இராணுவ தள வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், கிளிநொச்சி முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் பியல் நாணயக்காரவசம், 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க ,662 பிரிகேட் தளபதி கேணல் சமிந்த லியனகே, 20 வது இலங்கை இலேசாயுதக காலாட் படையின் கட்டளை அதிகாரியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் சில இடைநிலை சிகிச்சை மையங்களையும் திறந்துவைத்தனர்.