Header

Sri Lanka Army

Defender of the Nation

21st May 2021 09:55:41 Hours

வைரஸ் பரவலை தடுக்க 11 வது இலங்கை சமிக்ஞை படையினரின் தொழில்நுட்ப உதவி

இலங்கை இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரி மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் 11 வது இலங்கை சமிக்ஞை படையினர் கம்பாஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பயோமெட்ரிக் தரவுகளை கணினி மயமாக்குவதற்கான தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் மனித வள உதவிகளையும் வழங்கி வருகின்றர். இதனால் ஒரே சமயத்தில் ஈ – செனலிங் செயன்முறைக்கு பங்களிப்பு செய்வதுடன் பெருமளவானவர்களுக்கு சேவை வழங்குவதற்கு உதவியாக அமைந்திருந்தது.

கொவிட்-19 நோய்த்தொற்றுடையவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் குறித்து சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தரவுகளை உள்ளிடுவதற்கு இலங்கை சமிக்ஞை படையினர் கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் கோரிக்கைக்கு அமைய உதவிகளை வழங்கினர்.