Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2021 14:10:49 Hours

இராணுவத்தினரால் தங்காலை வைத்தியசாலையில் மேம்படுத்தப்பட்ட வாட் தயார் நிலையில்

112 வது பிரிகேடின் 23 வது கஜபா படையணி, 3 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி மற்றும் பொறியியலாளர் சேவை படையணி ஆகியவற்றின் படையினர், பிராந்தியத்தில் கொவிட்-19 தொற்றாளர்களின் அவசர நிலையை எதிர்கொள்ளும் முகமாக, தங்காலை தள வைத்தியசாலையின் ஒரு வாட்டினை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியமைத்தனர். இந்த குறித்த இடைநிலை பராமரிப்பு மையமானது வியாழக்கிழமை (13) முதல் செயல்பட்டு வருகிறது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியின் ஒருங்கிணைப்புடன், கொவிட் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் அவசரகாலத்தில் தங்குவதற்கான வசதிக்காக, தங்கல்ல மருத்துவமனையில் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் த்துழைப்புடன் இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றப்பட்டது. சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலுக்கமைய இந்த திட்டமானது பூரணப்படுத்தப்பட்டது.

இந்த இடைநிலை பராமரிப்பு மையமானது கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய 12 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக, மற்றும் 112து பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக பல்லேகும்புர ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் ஆரம்பமானது.