Header

Sri Lanka Army

Defender of the Nation

19th May 2021 20:15:42 Hours

நொப்கோ மையத்தில் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடல்

ராஜகிரியவிலுள்ள கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தில் மேலும் ஒரு கலந்துரையாடல் இன்று (19) காலை இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலில் கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் , அனைத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டதோடு, அங்கு தற்போதய நிலைமைகள் தொடர்பாகவும் வீட்டில் தனிமைப்படுத்தும் உத்தி மற்றும் அரச தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், அவசரகால நடைமுறைகள், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்த கலந்துரையாடலுக்கு கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ,சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும், மருத்துவ நிபுணர்களும் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.

கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிலைகள் 1, 2 மற்றும் 3 என வகைப்படுத்தியதோடு, அதிகமான தொற்றாளர்கள் அடிமட்டத்திலிருந்து பதிவாகின்றமையினால் விரிவான தனிமைப்படுத்தும் நடைமுறைகள், நோய் தொற்றாளர்களை தேர்ந்தெடுப்பது, தனிமைபடுத்தல் கட்டுப்பாடுகள் போன்ற செயல்பாட்டு அம்சங்களுக்கு தேவைப்பாடு தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

மேலும் தொற்றின் அறிகுறியற்றவர்கள் பதிவாகியுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட தொற்று நோயளர்களையும் எவ்வாறு வகைப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவா முனசிங்க விளக்கினார். 12-50 வயது வயதெல்லையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன. வீட்டின் சூழலில் தனிமைப்படுத்த அவர்களின் விருப்பம் தொடர்பான விஷயங்களும் மதிப்பீடு மற்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பி.சி.ஆர் சோதனை நடைமுறைகள், அரச மற்றும் தனியார் துறை மருத்துவமனைகளில் பி.சி.ஆர் சோதனைகளை நடத்துதல் மற்றும் தடுப்பூசி திட்டங்கள் குறித்து பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இக் கலந்துரையாடலில் விளக்கினார். இக்கூட்டத்தில் மருத்துவ நிபுணர்களும் கலந்துகொண்டு குறிப்பிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை முன்மொழிந்தனர்.