27th May 2021 16:00:37 Hours
கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வருகை தந்து இராணுவத்தினரால் கொவிட் -19 சிகிச்சைக்காக மேம்படுத்தப்பட்ட 1200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையுடனான புதிய இடைநிலை பராமரிப்பு மையத்தை இன்று (18) பிற்பகல் பார்வையிட்டார்.
சீதுவை, பிரன்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம் வழங்கிய தொழிற்சாலை கட்டிடத்தில் 10 நாட்களுக்குள் மூன்று பெரிய வார்டுகளைக் கொண்ட கொவிட் -19 சிகிச்சைக்காக மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையுடனான புதிய இடைநிலை பராமரிப்பு மையத்தின் நிர்மாணிப்பு பணிகள் மாற்றுத் திறனாளி படையினர் உள்ளிட் பல படையணிகளின் படையினர்களின் கூட்டு முயற்சியால் இடம்பெற்றதுடன் பிரன்டிக்ஸ் ஆடைஉற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அஷ்ரப் ஓமர் , இந்த உன்னத நோக்கத்திற்காக இடம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
இராணுவ சேவா வணிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவ நெல்சன் அவர்களின் தலைமையில் இராணுவ சேவா வணிதா பிரிவு அதன் செலவில் தேவையான அனைத்து பாகங்கள், கருவிகள், கைத்தறி, பிளாஸ்க்குகள், கோப்பைகள் மற்றும் பீங்கான்கள் , தலையணைகள் உள்ளிட்ட அனைத்து அவசியமான பொருட்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் வெற்றிக்காக திருமதி சுஜீவ நெல்சன் இராணுவ சேவா வணிதா பிரிவு உறுப்பினர்கள் மற்றும் இராணுவ சேவா வணிதா பிரிவு அலுவலகத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
இந்த திட்டம், இராணுவ சேவா வனிதா பிரிவினரின் ஒத்துழைப்புடன் அவசர சிகிச்சை பிரிவு, தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு , மருத்துவ களஞ்சியம் ஆகிய அதிநவீன வசதி போன்ற அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் 3 ஆவது கொவிட் -19 அலை மீண்டும் எழுந்ததை அடுத்து எந்தவொரு அவச நிலையையும் எதிர்கொள்ள கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் மேற்கொண்ட முயற்சியின் பேரில் இலங்கையில் இதுபோன்ற ஒரு குறுகிய காலத்தில் மேற் கொள்ளப்பட்ட திட்டத்தின் முதல் வகை இதுவாகும்.
இந்த வளாகத்திற்கு வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் வரவேற்கப்பட்டார். அதன்பிறகு, ஜனாதிபதியுடன் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), சுகாதார செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஏனைய பிரதிநிதிகள் புதிய இடை நிலை பராமரிப்பு மையத்தில் உள்ள இதில் அனைத்து வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதாரத் தேவைகள் உள்ளடங்கப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டனர்.
அவர் அந்த இடத்தில் இருந்த வைத்திய நிபுணர்களுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அவர் வளாகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
ஆபத்தான நிலையில் உள்ள நோய்த் தொற்றாளர்கள் மீது மருத்துவ ஊழியர்கள் மிகுந்த கவனம் செலுத்தும் சந்தர்பத்தை வழங்கும் முகமாக, கொவிட்-19 நோய் தொற்றுக்குள்ளானவர்கள் வீடுகளில் சிககிச்சை பெற்றுக்கொள்ள முடியாத நபர்கள், தீவிர அறிகுறிகளைக் காட்டாதவர்கள் இந்த புதிய மையத்தில் சிகிச்சையளிக்கப்படவுள்ளனர். சுகாதார அமைச்சகம் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணி இணைந்து இந்த மையத்தில் மருத்துவ சேவைகள் வழங்கும்.
இந்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ், 14 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாபா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ ,141 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க ஆகியோரால் வரவேற்கப்பட்டார்.
"இந்த அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, இராணுவம் உடனடியாக பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான நாடு முழுவதும் வேலையை தொடங்கியது, இதன் விளைவாக, அனைத்து பிராந்திய மட்டங்களிலும் உள்ள பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் இடைநிலை பராமரிப்பு மையங்கள் அல்லது மருத்துவமனைகளாக பணியாற்றுவதற்காக புதிய இடங்களை மேம்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தற்போதுள்ள திறன்கள் ஏற்கனவே அதிகமாக இருப்பதால் கொவிட-19 சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சிறந்த அவசரகால சுகாதார சேவையை இலவசமாக வழங்குவதற்கான வெளிப்படையான நோக்கத்துடன் சீதுவையில் இந்த அதிநவீன வசதி மையத்தை விரைவில் திறக்க எதிர்பார்க்கிறோம், " என ஜெனரல் ஷவேந்திர சில்வா ஊடகத்தினருக்கு பதிவு செய்துள்ளார்.
குறித்த மேம்படுத்தப்பட்ட புதிய கொவிட்-19 வைத்தியசாலையானது அனைத்து முக்கிய சுகாதார வசதிகளையும் கொண்ட 1200 படுக்கைகளை கொண்ட வைத்தியசாலையாகும். நாங்கள் முதன்மையாக 5000 படுக்கைகளை தயார் செய்வோம், அடுத்த இரண்டு நாட்களுக்குள் அதை நாடு முழுவதும் 10,000 படுக்கைகளாக உயர்த்துவதே எமது இலக்கு. இந்த இடத்தில், அவசர அடிப்படையில் தனி அறைகள் மற்றும் இடங்களுடன் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளைக் கொண்டு 1200 நோயாளிகளை சமாளிக்க முடியும் .இராணுவம் ஏற்கனவே வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பரமரிப்பு நிலையங்களுக்கு படுக்கைளை வழங்கியுள்ளதோடு அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளையும் வழங்கியுள்ளது. மேலும் நட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள 86,000 படுக்கை கட்டில்களில், ஆரம்பத்தில் கொவிட்-19 நோயாளிகளின் திறன் குறைவாக உள்ளமையினால் நாங்கள் சுமார் 5000 படுக்கை கட்டில்களை மட்டுமே பயன்படுத்தினோம் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
சீதுவை தொழிற்சாலை வளாகமானது பிரன்டிக்ஸ் நிறுவனத்தினால் கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டிற்காக வழங்கப்பட்ட மூன்றாவது இடமாகும். இதற்கு முன்னதாக அவர்களின் பூனானி மற்றும் ரம்புக்கனை தொழிற்சாலைகளை இந்த உன்னத காரியத்திற்காக வழங்கி்யுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனமானது சர்வதேச அங்கிகாரம் பெற்ற லீ்ட் பிலன்டியம் சான்றிதழ் பெற்ற ஆடை உற்பத்தி நிறுவனமாகும்.
பாதுகாப்பு செயளகத்தின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ரானி குணரத்ன இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி சுஜீவா நெல்சன், பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு அஷ்ரப் ஓமர், பிரன்டிக்ஸ் குழும நிருவாக அதிகாரி மேஜர் ஜெனரல் உதய பெரேரா (ஓய்வு), உட்பட பிரன்டிக்ஸ் குழுவின் பல அதிகாரிகளுடன், பல இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.