17th May 2021 08:51:49 Hours
ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள வறிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் கருத்திற் கொண்ட 64 வது படைப் பிரிவு தலைமையக படையினர் ஞாயிற்றுக்கிழமை 16 ஆம் திகதி அதிகமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காய்கறி பொதிகள் வழங்கும் திட்டத்தை மேற் கொண்டனர்.
இந்த திட்டமானது 64வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் முன் முயற்ச்சியால் மேற் கொள்ளப்பட்டது.
படைப் பிரிவின் தளபதி அவர்களின் வேண்டுகோளின் பேரில் சில மொத்த வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட உருளைக்கிழங்கு, கீரை, முருங்ககாய், வெங்காயம், பூசணி, வெள்ளரி, புடலங்காய் உள்ளிட்ட பல வகையான காய்கறிகள் இந்த திட்டத்தின் போது தேவைப்படும் குடும்பங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் 64 வது படைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.