Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2021 09:51:49 Hours

அனுராதபுரத்தில் கொவிட் -19 கட்டுபாடு தொடர்பான ஆராய்வு

வட மத்திய மாகாண ஆளுநர் திரு மஹீபால ஹேரத் தலைமையிலான கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அனுராதபுர மாவட்ட ஒழுங்கமைப்பு குழு கூட்டமானது அனுராதபுரத்தில் உள்ள வட மத்திய மாகாண சபை அலுவலகத்தில் 2021 மே 12 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அனுராதபுர மாவட்ட செயலாளர் திரு ஆர்.எம். வன்னிநாயக, 21 வது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஆர்.எம்.எம்.ரத்நாயக்க, அனுராதபுர சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் திரு டபிள்யூ கித்சிரி ஜயலத் மற்றும் பல பங்குதாரர்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது பாதுகாப்புப் படை, அரச ஊழியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து முறையான நடவடிக்கையை அமல்படுத்தும் அதே வேளையில், தொற்றுநோய் திடீரென பரவுவதைத் தடுக்க அனுராதபுர மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டன