Header

Sri Lanka Army

Defender of the Nation

17th May 2021 10:51:49 Hours

551 வது பிரிகேட் படையினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும் மகரந்தத்துடனான புதர்களை அகற்றல், நுளம்பு பெருகும் இடங்களை கட்டுப்படுத்தல் மற்றும் ,டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தல் உள்ளட்ட நோக்கங்களை அடிப்படையாக கொண்ட ஒரு சிரமதான நிகழ்வானது யாழ்பாணத்தில் செவ்வாய்கிழமை 11 ஆம் திகதி இடம்பெற்றது.

புலோலியில் உள்ள 4 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் யாழ்ப்பாண பருத்தித்துறை (ஏ -20) இல் உள்ள உடுப்பிட்டி -கரணவாய் வீதியில் சுமார் 4 கி.மீ தூரத்தை உள்ளடக்கிய இரு வீதியோரங்களையும் சுத்தம் செய்தனர்.

இந்த திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் ஆலோசனையின் கீழ் 55 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலாபிட்டி அவரகளின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. 551 வது பிரிகேட் தளபதி இந்த திட்டத்தை மேற்பார்வை செய்தார்.

அந்தந்த பகுதிகளில் வசிப்பவர்கள், பருத்தித்துறை பிரதேச சபையின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் இந்த திட்டத்திற்கான தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.