17th May 2021 07:51:49 Hours
கொவிட்-19 வைரஸ் தொற்றுநோய்க்கெதிராக பயன்படுத்தும் முகமாக, கிழக்கிலுள்ள 12 பொலிஸ் நிலையங்களுக்கான 1000 பிரத்தியேக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த நன்கொடையானது மட்டக்களப்பு பிரன்டிக்ஸ் அத்தாவசிய பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் திரு ஷா கமீட் அவர்களினால் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவுத் தலைமையக பொது பதவி நிலை அதிகாரி 1 ( நடவடிக்கை) லெப்டினன் கேணல் நிலந்த மானகே அவர்களின் ஒருங்கிணைப்பினூடாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது 23 வது படைப்பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த மற்றும் 231 வது பிரிகேட் தளபதி கேணல் விஜித கெட்டிஆராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.