Header

Sri Lanka Army

Defender of the Nation

12th May 2021 09:48:00 Hours

இலங்கை இராணுவ சேவை படையணியின் புதிய தளபதி பதவியேற்பு

கிழக்கு முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படைத் தளபதி பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன அவர்கள் பனாகொடையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தின் 23 ஆவது படைத் தளபதியாக வெள்ளிக்கிழமை (07) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இலங்கை இராணுவ சேவை படையணிக்கு வருகை தந்த புதிய தளபதிக்கு தலைமையக வளாகத்தில் வைத்து இலங்கை இராணுவ சேவை படையணியின் படையினரால் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை இராணுவ சேவை படையணியின் நிலையத் தளபதி கேர்ணல் அசோக அம்பன்பொல அவர்களால் அவர் வரவேற்கப்பட்டார்.

பின்னர், பிரிகேடியர் மகேஷ் அபேரத்ன பௌத்த மகா சங்கத்தினரின் 'செத் பிரித்' பராயணத்துடன் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நடைமுறையில் உள்ள நோய் தொற்று காரணமாக நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்டதோடு, படையினர் மத்தியிலான சுருக்க உரை மற்றும் தேநீர் விருந்துபசாரம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.