14th May 2021 10:00:04 Hours
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான பொலனறுவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மேலும் ஒரு சந்திப்பு வியாழக்கிழமை (13) பொலனறுவையில் உள்ள மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பானது மத்திய மாகாண ஆளுநர் திரு மஹீபால ஹெரத் தலைமையில் நடைபெற்றது.
பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு அமரகீர்த்தி அத்துகொரல, பொலனறுவை மாவட்ட செயலாளர் திரு. டபிள்யூ.ஏ தர்மசிறி, பொலனறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் பலர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த சந்திப்பின் போது அனைத்து மாவட்டத்திற்குள்ளும் பிராந்தியங்கள் முழுவதிலும் பயண தடை விதித்ததைத் தொடர்ந்து தற்போதைய நிலை தொடர்பாக தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மற்றும் கொவிட் தொற்று நோய் திடீரென பரவுவதைத் தடுக்க பொலனறுவை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.