Header

Sri Lanka Army

Defender of the Nation

14th May 2021 12:20:56 Hours

வன்னி பாதுகாப்பு தலைமையகத்தின் ஏற்பாட்டில் 820 படுக்கைகளுடன் கூடிய இடை நிலை பராமரிப்பு நிலையங்கள் தயார் நிலையில்

கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ், வன்னி பாதுகாப்புப் படை தலைமையகத்தினர் எந்தவொரு கொவிட்-19 அவசரநிலையையும் முகம்கொடுக்கும் நிமித்தம் 5 இடங்களை கொவிட்-19 இடைநிலை பராமரிப்பு நிலையங்களாக மாற்றியுள்ளர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, 21, 54 மற்றும் 56 ஆவது படைப் பிரிவுகளின் தளபதிகளின் ஒத்துழைப்புடன் வவுனியாபொருளாதார மையம் (200 படுக்கைகள்), மன்னார் துருக்கி நகர தனியார் பாடசாலை (120 படுக்கைகள்) வஹமலுகொல்லேவ மையம் (250 படுக்கைகள்) , கல்கிரியகம சிவில் பாதுகாப்புத் துறை தலைமையகம் (150 படுக்கைகள்) மற்றும் மிஹிந்தல நித்தியகமையில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறை தலைமையகம் (100 படுக்கைகள்) ஆகிய நிலையங்களை இடை நிலை பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளனர்.

இவை அனைத்து இடை நிலை பராமரிப்பு நிலையங்களின் மொத்த தயார்படுத்தப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 770 ஆகும். அந்த இடங்களை நிறுவுவதற்கு அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர் மற்றும் சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் ஆகியோர் பாதுகாப்புப் படையினருக்கு நெருக்கமான ஒத்துழைப்பையும் வழங்கினர்.

வட மத்திய மாகாணம் மற்றும் வட மாகாணம் ஆகிய இரு இடங்களிலும் அமைந்துள்ள அந்த ஐந்து இடை நிலை பராமரிப்பு நிலையங்களும் அரசாங்கத்தின் அவசரகால நிலைக்கு பதில்லிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.