14th May 2021 15:01:23 Hours
கொவிட்- 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் சில நாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள படையினர்களைக் கொண்டு வட்டக்கோட்டையில் உள்ள வட்டக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத்தை இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றியது, ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக இதில் 200 நோய் தொற்றாளர்களுக்கு இடமளிக்ககூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்கள் வியாழக்கிழமை (12) குறித்த இடத்திற்கான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். யாழ் குடா நாட்டின் பருத்தித்துறை மந்திகையில் அமைந்துள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தில் உள்ள தள வைத்தியசாயைின் வைத்திய அதிகாரிகள், தாதிமார் மற்றும் உதவியாளர்கள் இந்த இடைநிலை பராமரிப்பு நிலையத்தை நிர்வகித்து கொவிட்-19 தொற்றாளர்களுக்கு அவச சிகிச்சை வழங்குவார்கள் என்று எதிர்பார்கப்படுகின்றது.
அத்துடன் சி|ரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்திருந்தனர்.