15th May 2021 11:13:25 Hours
இலங்கை மின்சார மற்றும் பொறிமுறை இயந்திர படையணியின் லான்ஸ் கோப்ரல் Y.பிரியதர்ஷன அபேகோன் வெள்ளிக்கிழமை (14) ஜேர்மனி சவோனாவில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியின் 100 மீட்டர் தடகளக் போட்டியில் கலந்துகொண்டு 10.15 வினாடிகள் ஓடி புதிய தெற்காசிய சாதனை படைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெற்ற 7 ஆவது உலக பாதுகாப்பு சேவைகள் தடகளக் போட்டியின் 4 x 400 மீட்டர் ரிலே போட்டியில் கலந்துகொண்ட லான்ஸ் கோப்ரல் Y.பிரியதர்ஷன அபேகோன் ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்று இலங்கைக்கு பொருமையை சேர்த்த்தோடு, தேசிய தடகளக் மற்றும் இராணுவ தடகளத்தில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவ தடகளக் குழுவின் தலைவரும், கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க ஆகியோர் அவரது திறமைகளை மேம்படுத்துவதற்கும், ஜெர்மனிக்குச் சென்று போட்டியில் பங்கேற்பதற்காகவும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கினர்.