14th May 2021 10:30:04 Hours
இன்று காலை (14) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2269 நபர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமான 643 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் 39 பேர் பொரலஸ்கமுவ, 39 பிலியந்தல, 37 பேர் ஹங்வெல மற்றும் 33 பேர் ஹோமாகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இதேபோல், கடவத்த தெற்கு 34, கட்டுனாயக 29, மினுவாங்கொடை 22 மற்றும் பியகம 21 உட்பட கம்பஹா மாவட்டத்தில் இருந்து 301 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 174 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இவர்களில் 65 எம்பிலிபிட்டிய, 42 பலாங்கொடை மற்றும் 19 எகலியகொட ஏனையவர்கள் ரத்னபுரி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கொழும்பு, ரத்னபுரி, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து 1118 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1151 நோயாளிகளில் காலி 155, அனுராதபுரம் 126, களுத்தற 121, குருநாகல் 100, கேகாலை 91, பொலன்னருவை 80, நுவரெலிய 67, கண்டி 61, மாத்தறை 59, பதுல்லை 42, புத்தளம் 40, மாத்தலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இருந்து 31, திருகோணமலை 25, மொனராகலை மாவட்டம் 22, மட்டக்களப்பு 20, ஹம்பாந்தோட்டை 18, அம்பாறை 16, முல்லைத்தீவு 13, வவுனியா மாவட்டம் 10, கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.