Header

Sri Lanka Army

Defender of the Nation

12th May 2021 14:00:48 Hours

கண்டியில் மேலும் அவசர சிகிச்சைக்கான இடை நிலை பராமரிப்பு மையம்

சுகாதார துறையினர் மற்றும் மாவட்ட செயலகத்துடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, கம்பலையில் உள்ள இளைஞர் மையத்தை ஒரு இடைநிலை பராமரிப்பு மையமாக மாற்றுவதற்காக கண்டியில் உள்ள 11 ஆவது படைப் பிரிவு தலைமையகம் மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பொல்கொல்ல மகாவேலி தேசிய கல்லூரி மற்றும் ஆசிரியர் அழகியல் கல்வியல் கல்லூரி மற்றும் கிரகம இடை நிலை பராமரிப்பு நிலையங்கள் ஆகியவை ஏற்கனவே இடைநிலை சிகிச்சை மையங்களாக இயங்குகின்றன.

கண்டி மாவட்டத்தில் கொவிட் -19 தொற்று பரவல் தொடர்பான குறித்த ஆய்வைத் தொடர்ந்து, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே மற்றும் 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க ஆகியோரின் உடன்பாட்டில் தொற்று நோய் நிலைமை அதிகரிக்க முன்னர் இடை நிலை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

111வது பிரிகேட் படையினரால் தற்போது கண்டி சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து பொல்கொல்ல மற்றும் ஜிரகம இடைநிலை சிகிச்சை பராமரிப்பு மையங்களை பராமரித்து வருகின்றனர்.

111 ஆவது பிரிகேட்டின் படைப்பிரிவினால் நிர்வகிக்கப்படவுள்ள கம்பொல இளைஞர் இடை நிலை பராமரிப்பு மையத்திற்கு 2 ஆவது (தொண்டர்) இலங்கை சிங்கபடையணியின் படையினர் பாதுகாப்பு வழங்குவர்.

இந்த புதிய சிகிச்சை நிலயத்தில் உடனடியாக 120 க்கும் மேற்பட்ட நோய் தொற்றாளர்கள் தங்க வைக்க முடியும். 11 ஆவது படைப் பிரிவின் தகவலினடிப்படையில் கம்பொல இடை நிலை பராமரிப்பு மையம் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் செயல்பட உள்ளது.