12th May 2021 11:00:00 Hours
கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 பரவலை தடுப்பதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரனசிங்க மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோருக்கடையிலான சந்திப்பானது (09) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி கொவிட் நிலைமை தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதோடு . நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையைத் குறைப்பதற்கும் வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.என்றும் அதற்கான முன் முயற்ச்சிகளை கையாள்வதில் நன்கு ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த மாநாட்டில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.சர்வன பவன், 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் திசானாயக, 57 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, உட்பட ஏனைய வைத்திய பணியாளர்கள் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.