12th May 2021 12:00:00 Hours
இன்று காலை (12) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 2568 நபர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகமான 606 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் 53 பேர் கொழும்பு , 40 பேர் முல்லேரியா, 36 பேர் பிலியந்தல மற்றும் 30 பேர் கொட்டாவையை சேர்ந்தவர்கள் என கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிக்கிறது.
இதேபோல் களுத்துறை மாவட்டத்தில் இருந்து 417 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். பானந்துறை தெற்கு 102, மிலனிய 58 பேர், 36 பேர் தொடங்கொட மற்றும் 35 பேர் களுத்துறை தெற்கு என பதிவாகியுள்ளன.
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 300 நோயாளிகள் பதிவாகியுள்ளனர், இவர்கள் கட்டுனாயக்க 62 பேர், நீர்கொழும்பு 35 பேர், மற்றும் 31 பேர் ஜா-எல மற்றும் கொழும்பு ஏனையவர்கள் கொழும்பின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் கறுத்துறை மாவட்டங்களில் இருந்து 1323 நோய் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஏனைய 1245 நோயாளிகள் பின்வருமாறு பதிவாகியுள்ளனர்: குருநாகலை 196, காலி 148, கண்டி 110, மாத்தளை 108, அனுராதபுரம் 90, 64 நுவரெலிய மற்றும் ரத்னபுர மாவட்டங்களில், 61 யாழ்பாணம், 57 பொலனருவை, 41 ஹம்பந்தோட்டை, 37 புத்தளம், 29 மொனராகல மற்றும் மாத்தறை, 27 பேர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டம், 25 கிளிநொச்சி, 24 பேர் முல்லைத்தீவு மாவட்டம், 23 திருகோணமலை மாவட்டம், 6 கேகாலை மாவட்டம் மற்றும் 5 வவுனியா மாவட்டதை சேந்தவர்கள் ஆவர்.