14th May 2021 10:18:04 Hours
மாவட்ட மற்றும் பிராந்தியங்களுக்குள் போக்குவரத்துகள் தடை விதிக்கப்பட உள்ளது, இந்த தடையானது வியாழக்கிழமை (13) இரவு 11.00 மணி முதல் திங்கள் (17) அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட உள்ளது. கொவிட் தடுப்பூசிக்காகவும் ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காகவும் பிரத்தியேகமாக செல்லும் மக்கள் தவிர ஏனையவர்களுக்கே இந்த தடை விதிக்கப்படவுள்ளது என கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதயுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.