11th May 2021 22:05:15 Hours
டெக்சாஸில் நடைபெற்ற 2021 லோன் ஸ்டார் மாநாடு வெளியரங்கு தடக் கள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் சாதாரண சிப்பாய் எச்.டி உஷான் திவாங்க பெரேரா தெற்காசிய மற்றும் இலங்கை உயரம் பாய்தல் சாதனையை புதுபித்துள்ளார்.
டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிப்பாய் உஷான் திவாங்க பெரேரா 2.30 மீட்டர் உயரத்தை பாய்ந்து சாதனை படைத்து வெளியரங்கு சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஆண்கள் உயரம் பாய்தல் போட்டியில் முதலிடம் பெற்றார்.
அந்த வகையில் அவர் தனது சொந்த சாதனையான இலங்கையின் தேசிய சாதனையையும். தெற்காசிய சாதனையையும் 2.21 மீற்றர் பாய்ந்து புதுப்பித்ததுடன் அவர் 2.33 மீட்டர் ஒலிம்பிக் தகுதியை நெருங்கியுள்ளார். அதன் ஊடாக சர்வதேச உயரம் பாய்தல் வீரர்களின் முதல் 3 தரவரிசையில் இடம் பிடித்துள்ளார்.
அவரது திறமைகளை கருத்தில் கொண்டு, பாதுகாப்புப் பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தடகளக் குழுவின் தலைவரும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காவில் மேலதிக பயிற்சிகளை பெறுவதற்காக சமீபத்தில் நிதியுதவி வழங்கியிருந்தார்.