Header

Sri Lanka Army

Defender of the Nation

11th May 2021 20:58:18 Hours

ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரண தொலைக்காட்சியின் 'கெட் ரியல்' நிகழ்ச்சியில் பங்கு பற்றல்

தெரண 24 க்கு 7 அலைவரிசையில் திங்கட்கிழமை (10) மாலை 'கெட் ரியல்' நிகழ்ச்சியில் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துக் கொண்டு கொவிட்-19 இன் முன்னேற்றங்கள், அவசர நடவடிக்கைகள், வெவ்வேறு முன்னோக்குகள், பிரச்சினைகள், தடுப்பு வழிமுறைகள் மற்றும் ஆர்வங்கள் ஆகியன தொர்பாகவும் தொற்றாளர்களின் அதிகரிப்பு, , தடுப்பூசி செயல்முறை, தற்போதைய நடைமுறை பிரச்சினைகள், மாவட்டங்களிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் கொவிட் நோயாளிகளின் அதிகரிப்பைத் தணிப்பதற்கான வேறு சாத்தியப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.