10th May 2021 22:56:06 Hours
கொவிட் -19 அறிகுறிகள், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காத்தான்குடி நகரம் மற்றும் அதனை அண்டிய பொதுமக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 11 வது (தொ) சிங்கப் படையினர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (7) மேற்கொண்டனர்.
23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 231 வது பிரிகேட் தளபதி கர்ணல் விஜித ஹெட்டியாராச்சி அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இராணுவ படையினரின் உதவியுடன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாத 16 பேரை பொலிஸார் கைது செய்தனர்.