10th May 2021 22:51:53 Hours
கொவிட் -19 தொற்றுநோயைத் தடுக்கும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு புதன்கிழமை (05) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் கூடியது. மேலதிக மாவட்ட செயலாளர் திரு கே கருனாகரன், மட்டக்களப்பு மாநகர சபை மேயர், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் 23வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்த, 231 வது பிரிகேட்டின் தளபதி கர்ணல் விஜித ஹெட்டியாராச்சி, மற்றும் சிலரும் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டின் போது, தொற்றுநோய் திடீரென பரவுவதைத் தடுப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து மேஜர் ஜெனரல் நலின் கொஸ்வத்தவுடன் பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் தற்போதுள்ள பொறிமுறையின் மேம்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.