Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2021 22:43:01 Hours

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படையினர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்

கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படையினர் சமீபத்தில் மினேரிய மகாசேனன் கோவில் வளாகம் மற்றும் மினேரிய குளக்கட்டை அண்டியப் பகுதிகளில் சிரமதானத்தை மேற்கொண்டனர்.

திட்டத்தின் போது படையினர் யாத்திரை சென்றவர்களால் போடப்பட்டிருந்த பெருந் தொகையான குப்பைகளை சேகரித்தனர். இத்திட்டத்திற்கு ஹிங்குரங்கொடை பிரதேச சபை ஊழியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

கோவிலின் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் நடத்தப்பட்டது.