Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2021 22:34:54 Hours

படைப்பிரிவு தளபதி இடைநிலை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் தயார் நிலையை ஆராய்வு

குண்டசாலை 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிரி லியனகே பதவியேற்று சில மணிநேரங்களுக்குப் பிறகு கஹகொல்ல மற்றும் பிந்துநுவெவ இடைநிலை பராமரிப்பு நிலையங்களுக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டார். அத்தோடு பேருந்து சபை பதுளை சாலை மற்றும் வேவெஸ்ஸ அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றில் நிர்மாணிக்க முன்மொழியப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களை வெள்ளிக்கிழமை (7) பார்வையிட்டார்.

112 பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்கவுடன் சேர்ந்து, குறித்த இடங்களில் கிடைக்கும் வசதிகளையும், அந்த இடங்களில் கிடைக்கும் மருத்துவ மற்றும் பிற உபகரணங்கள் தொடர்பாகவும் உன்னிப்பாக ஆராய்ந்தார். மேலும் குறித்த இடங்களுக்குப் பொறுப்பானவர்களுடன் நிர்வாக விடயங்கள் மற்றும் பிற நடைமுறை அம்சங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். விவாதித்தார்.

சில சிரேஸ்ட அதிகாரிகளும் குறித்த விஜயத்துடன் இணைந்திருந்தனர்.